கொல்கத்தா: மும்பையில் இருந்து கொல்கத்தாவிற்கு 123 பயணிகளை ஏற்றிக்கொண்டு விஸ்டாரா விமானம் சென்றது.
அந்த விமானம், தரையிரங்கும்போது வெளிப்புற காற்றின் அழுத்தம் அதிகமாக இருந்ததால், விமானத்தில் வந்த மூன்று பயணிகள் படுகாயமடைந்தனர். மேலும், 5 பேர் சிறிய அளவிலான காயமுற்றனர்.
வெளிப்புற காற்றின் அழுத்தம் அதிகமாக இருந்தசூழலிலும், விமானம் மாலை 4.25 மணியளவில் பாதுகாப்பாக தரையிரக்கப்பட்டது. படுகாயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொல்கத்தாவில் இருந்து 25 நாட்டில் மைல் தொலைவில் விமானம் இருந்தபோது, இந்தச்சிக்கல் ஏற்பட்டதாக விமானத்தின் இயக்குநர் பட்டாபி கூறியுள்ளார். மேலும், இது பயணிகளுக்கு மேசமான அனுபவத்தை கொடுத்துள்ளதாகவும், படுகாயமுற்றவர்களின் உடல்நிலையை கவனித்துவருகிறோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பூம்ம்... காற்றைக் கிழித்து ஒலியை விட வேகமாகச் செல்லும் விமானம்!