மத்திய பிரதேசம் மாநிலம் ஷாடோல் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பிறந்த குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று நாள்களில் மட்டும் சுமார் 8 குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
கிடைத்த தகவலின்படி, உயிரிழந்த அனைத்து குழந்தைகளும் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த தொடர் உயிரிழப்பை தடுத்திட அலுவலர்களும், மருத்துவர்களும் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மேலும், இந்த உயிரிழப்புக்கு பின்னால் உள்ள காரணத்தை கண்டறிய விசாரணை குழு ஒன்றும் அமைத்துள்ளனர்.