தர்மசாலா: ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சம்பா மாவட்டம் டீசா துணைப் பிரிவில் இன்று காலை 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 11 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து விசாரணை நடத்த முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சம்பா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருள்குமார் தலைமையிலான குழு விசாரணையை தொடங்கியுள்ளது.
தனியார் பேருந்து கவிழ்ந்து 8 பேர் உயிரிழப்பு - பேருந்து விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
ஹிமாச்சலப் பிரதேசத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில், எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.