ETV Bharat / bharat

மிசோராமில் கல் குவாரியில் விபத்து; 8 பேர் உயிரிழப்பு...

author img

By

Published : Nov 15, 2022, 1:12 PM IST

மிசோராமில் கல் குவாரியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களில் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

மிசோரமில் கல் குவாரியில் விபத்து; 8 பேர் உயிரிழப்பு

ஹனாதியால்: தெற்கு மிசோராமின் ஹனாதியால் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் கல் குவாரியில் நேற்று ஏற்பட்ட திடீர் விபத்தில், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவரான லால்ரெம்சங்கா கூறுகையில், “காணாமல் போனவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்படும் வரை தேடுதல் பணிகள் தொடரும்.

மீட்பு பணிகளுக்காக, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) வரவழைக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனதாகக் கூறப்படும் 12 பேரில் 8 பேர் ஒப்பந்த ஊழியர்கள். அஸ்ஸாம் ரைபிள்ஸ் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) வீரர்கள், உள்ளூர் காவல்துறை மற்றும் மக்களுடன் மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருவதாக” தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஹனாதியால் காவல் கண்காணிப்பாளர் (SP) வினீத் குமார் கூறுகையில், ”ஹனாதியால் நகருக்கு அருகிலுள்ள மவுதார் கிராமத்தில் நேற்று மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. கல் குவாரியில் நிலச்சரிவு ஏற்பட்ட போது 13 பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். ஒரு தொழிலாளி மட்டும் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடினார்” என்று கூறினார்.

ஹனாதியால் மாவட்டம் மவுதார் என்னும் கிராமத்தில் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியை விரிவுபடுத்தும் பணியை மேற்கொண்டு வரும் இந்த கல் குவாரியில், ஆழமாக பள்ளம் தோண்டப்பட்டு வேலை நடந்ததால் குவாரியின் உறுதித்தன்மை சீர்குலைந்து விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: லிவிங் டூ கெதர் பயங்கரம்: காதலியின் பாகங்களை மீட்க காட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட காதலன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.