ETV Bharat / bharat

இந்தியா 75 ஆண்டுகளுக்கு முன்பே அகிம்சையின் வலிமையை உலகிற்கு காட்டியது - டெல்லியில் ராகுல் காந்தி

இந்தியா 75 ஆண்டுகளுக்கு முன்பே உண்மை மற்றும் அகிம்சையின் வலிமையை உலகிற்கு காட்டியதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தெரிவித்தார்.

75 yrs ago country showed strength of walking on path of truth, non-violence: Rahul

author img

By

Published : Aug 15, 2022, 7:55 PM IST

டெல்லி: நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக காங்கிரஸ் சார்பில் டெல்லியில் அமைதி ஊர்வலம் நடந்தது. இதில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அம்பிகா சோனி, குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து காந்தி நினைவிடம் வரை ஊர்வலமாக சென்றனர். அதன்பின் ராகுல் காந்தி கூறுகையில், "இந்தியா 75 ஆண்டுகளுக்கு முன்பே உண்மை மற்றும் அகிம்சையின் வலிமையை உலகத்திற்கு காட்டியுள்ளது.

இந்த நேரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூரும்வகையில் அமைதி ஊர்வலம் நடத்தினோம். காந்தியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினோம். இன்று நாம் சுதந்திரத்தின் 76ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இந்த நாட்டின் நலனுக்காக மக்கள் புதிய பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விளையாட்டு வீரர்கள் ஆதரிக்கவும் ஊக்குவிக்கவும் வேண்டும்... பிரதமர் மோடி...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.