இந்தியா விடுதலை பெற்ற சில மாதங்களில் ஜம்மு காஷ்மீரில் சலசலப்புகள் ஏற்படத் தொடங்கின. அப்போது, பாரமுல்லா பகுதியைச் சேர்ந்த இளைஞரான மக்பூல் ஷெர்வானி, ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைய முக்கிய பங்காற்றினார்.
1974ஆம் ஆண்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த பழங்குடியினர் காஷ்மீருக்குள் படையெடுத்தனர். 22 வயதேயான மக்பூல் ஷெர்வானி ஸ்ரீநகர் விமான நிலையத்தை நோக்கிய அவர்களின் வருகையை தடுத்து தாமதப்படுத்தினார். இதன் மூலம் இந்திய ராணுவம் சரியான நேரத்தில் விமான நிலையத்திற்கு வந்து பதிலடித் தாக்குதல் நடத்த வழிவகுத்து கொடுத்தார்.
1947ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி, பாகிஸ்தான் பழங்குடியினர் எல்லைத் தாண்டிவந்து காஷ்மீர் மீது படையெடுத்தனர். இதையறிந்ததும், மகாராஜா ஹரி சிங் காஷ்மீரிலிருந்து வெளியேறி ஜம்முவை அடைந்து இந்திய ராணுவத்தின் உதவியை நாடினார்.
அக்டோபர் 26ஆம் தேதி ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் ஒப்பந்தத்தில் மகாராஜா கையெழுத்திட்டார். அதன்பின், இந்திய ராணுவம் பாகிஸ்தான் படையினர் மீது தாக்குதல் நடத்தி அவர்களை வெளியேற வைத்தது.
1947ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இந்த வரலாற்றுச் சம்பவத்தில் மக்பூல் ஷெர்வானி முக்கிய நபராக திகழ்ந்தார். 22 வயதில் பாகிஸ்தான் படையினரால் வீழ்த்தப்பட்ட ஷெர்வானிக்கு இந்திய ராணுவம் நினைவுச் சின்னம் எழுப்பியுள்ளது.
எப்போதெல்லாம், பாகிஸ்தான் படையெடுப்பு தொடர்பான நினைவு காஷ்மீர் மக்களுக்கு வருகிறதோ, அப்போது பாரமுல்லாவின் மக்பூல் ஷெர்வானியும் நினைவுக்கு வருவார். இந்திய ராணுவத்தின் வெற்றிக்கு துணை நின்று வித்திட்டவர் மக்பூல் ஷெர்வானி.
நாட்டிற்காக உயிரை தியாகம் செய்த ஷெர்வானியின் நினைவைப் போற்றும் விதமாக வீரமரணம் அடைந்த அக்டோபர் 22ஆம் தேதி ஷெர்வானி தினமாக அனுசரிக்கப்படுகிறது. பாரமுல்லாவில் அவர் நினைவாக ஷெர்வானி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா 75 - விடுதலைப் புரட்சிக்கு வித்திட்ட கேசரி சிங் குடும்பம்