ETV Bharat / bharat

இந்தியா 75 - விடுதலைப் புரட்சிக்கு வித்திட்ட கேசரி சிங் குடும்பம் - Kesari Singh

இந்திய சுதந்திர போராட்டத்தின் வரலாற்றில் கேசரி சிங்கின் குடும்பத்தின் பங்கை யாராலும் மறக்கவோ மறைக்கவோ முடியாது. ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிக்க இந்த குடும்பம் செய்த தியாகத்தை நினைத்துப் பார்த்தால், இன்றும் பலரின் உள்ளம் பெருமிதம் கொள்கிறது.

75 years of Independence
75 years of Independence
author img

By

Published : Oct 23, 2021, 6:29 AM IST

கேசரி சிங் என்ற புரட்சி நாயகனின் புகழை ஷாஹ்பூரா பகுதியைச் சேர்ந்த ஒவ்வொரு அணுவும் எதிரொலிக்கும். தியாகம், வீரம், சக்தி ஆகியவற்றுக்கு அடையாளமாக விளங்கும் இந்த ஷாஹ்பூர பகுதி ராஜஸ்தான் மாநிலத்தின் பில்வாரா மாவட்டத்தில் உள்ளது.

இங்குள்ள அருங்காட்சியகம் கேசரி சிங், அவர் சகோதரர் சொராவர் சிங், மகன் பிரதாப் சிங் பர்ஹாத் ஆகியோரின் புகழை பறைசாற்றுகிறது. கேசரி சிங் பயன்படுத்திய டர்பன் இன்றும் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

1872ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி ஷஹ்பூரா பகுதியில் பிறந்தவர் கேசரி சிங். இளைஞர்களின் மனதில் புரட்சியை விதைத்தவர். அவரின் குடும்பமே விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றியது.

நாட்டின் விடுதலைப் போராட்டம் தொடர்பான ஆலோசனைகளை கேசரி சிங் தனது இல்லத்தில் பல முறை ரகசியமாக மேற்கொண்டுள்ளார். அண்ணல் காந்திக்கும் தனது முழு ஆதரவையும் தந்துள்ளார். சோரத் ராகத்தில் உருவான 'சேத்தாவனி ரா' என்ற பாடலை இயற்றி மக்கள் மனதில் புரட்சிக் கருத்துக்களை விதைத்தார் கேசரி சிங்.

விடுதலைப் புரட்சிக்கு வித்திட்ட கேசரி சிங் குடும்பம்!

1912ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி, டெல்லி சாந்தினி சௌக் பகுதியில் நடைபெற்ற ஹார்டிங் பிரபுவின் ஊர்வலத்தில் கேசரி சிங்கின் இளைய சகோதரர் சோர்வார் சிங் குண்டு வீசினார். இந்தச் சம்பவத்தின்போது கேசரி சிங்கின் மகன் பிரதாப் சிங்கும் உடனிருந்தார்.

நாட்டு விடுதலை இயக்கத்தில் 27 ஆண்டுகள் தீவிரமாக ஈடுபட்ட சோர்வார் சிங், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் உள்ள மக்களிடம் விடுதலை உணர்வை ஊட்டினார். இவர் 1939ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி காலமானார்.

கேசரி சிங்கின் மகன் பிரதாப் சிங்கும் நாட்டின் விடுதலைப்போராட்டத்தில் தான் தனது இன்னுரியை நீத்தார். 1893ஆம் ஆண்டும் மே 24ஆம் தேதி பிறந்த பிரதாப் சிங், 1912ஆம் ஆண்டு ஹார்டிங் பிரபு ஊர்வலத்தில் குண்டு வீசிய குற்றத்திற்காக சிறைப்படுத்தப்பட்டார். 1918ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி தனது 25ஆவது வயதில் சிறையிலேயே உயிரிழந்தார் பிரதாப் சிங்.

தனது முன்னோர்களை நினைக்கும் போது பெருமிதம் கொள்வதாகக் கூறுகிறார் கேசரி சிங்கின் கொள்ளுப்பேத்தியான சார்லா கன்வார். சாஹித் பிரதாப் சிங் சன்ஸ்தானில் தன்னை இணைத்துக்கொண்டதாக அவர் கூறுகிறார்.

இந்திய சுதந்திர போராட்டத்தின் வரலாற்றில் கேசரி சிங்கின் குடும்பத்தின் பங்கை யாராலும் மறக்கவோ மறைக்கவோ முடியாது. ஆங்கிலேயர்களின் பிடியிலிருந்து இந்தியாவை விடுவிக்க இந்த குடும்பம் செய்த தியாகத்தை நினைத்துப் பார்த்தால், இன்றும் பலரின் உள்ளம் பெருமிதம் கொள்கிறது.

இதையும் படிங்க: வரலாற்றில் மறைக்கப்பட்ட 1857 ஹிசார் புரட்சி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.