ஹைதராபாத் : ஒட்டுமொத்த நாடும் தேசிய உணர்வுடன் கொதித்தெழுந்து கொண்டிருந்த காலம் அது. ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகளாக பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியர்கள் சுதந்திரத்திற்காக ஏங்கினார்கள்.
நாட்டு மக்கள் விடுதலைக்காக மாபெரும் போராட்டங்களை நடத்தினார்கள். ஆங்கிலேயர்களின் காலனியாதிக்க சாம்ராஜ்யம் ஆட்டம் கண்டது. நாட்டில் குழப்பமான சூழல் நிலவியது. நீண்ட காலமாக நாட்டைப் பிளவுப்படுத்தி ஆட்சி செய்த ஆங்கிலேயர்களின் கொள்கை அவர்களுக்கே ஆபத்தாய் முடிந்தது.
ராம் முகம்மது சிங் ஆசாத்
அக்காலக்கட்டத்தில் ஆங்கிலேயர்களின் வரலாற்றில் இருந்து ஒருவருக்கு மரண தண்டனை அளிக்கும்முன் அவரது பெயரையும் அழிக்க விரும்பினர். அந்தப் பெயர் ராம் முகம்மது சிங் ஆசாத். காரணம், அந்தப் பெயர் இந்தியாவின் மும்மதங்களின் ஒற்றுமையை குறித்தது.
இதுவே ஆங்கிலேயர்களை பயமுறுத்த காரணம், இந்தப் பெயரை சுமந்தவர், ஆங்கிலேயர்கள் இந்தியாவில் நடத்திய படுகொலைக்கு எதிராக பழிதீர்க்க வெகுதூரமான இங்கிலாந்து வரை சென்றார். அவர்தான் ஷாகித் உத்தம் சிங். ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு உத்தரவிட்ட மைக்கேல் ஒ டயர் சுட்டுக்கொன்றார். காக்டன் ஹாலில் டயரை சுட்டு வீழ்த்தியபோது உத்தம் சிங் தனது பெயரை ராம் முகம்மது சிங் ஆசாத் என உச்சரித்தார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை
விடுதலை வீரரான உத்தம் சிங் டிசம்பர் 26ஆம் தேதி 1899ஆம் ஆண்டு சுனம் சன்ரூர் என்ற பகுதியில் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தார். அவருக்கு ஷேர் சிங் எனப் பெயர் சூட்டினர்.
அமிர்தசரஸ் அனாதை இல்லத்தில் ஷேர் சிங்குக்கு உத்தம் சிங் என்று பெயரிடப்பட்டது. அவர் தனது 17 வயதில் தனது சகோதரர் சாது சிங்கை இழந்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டபோது உத்தம் சிங்குக்கு வயது 19 வயது.
பழிக்கு பழி
துப்பாக்கிச் சூடு தொடங்கும் போது அவர் கூட்டத்தில் தண்ணீர் பரிமாறிக் கொண்டிருந்தார். அவர் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு தனது மக்களை ஆங்கிலேயர் படுகொலை செய்வதைக் கண்டார். இந்தக் கொடூரம் அவரை உலுக்கியது, மேலும் அவர் தன்னால் முடிந்த வழிகளில் படுகொலைக்கு பழிவாங்குவதாக உறுதிமொழி எடுத்தார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்க லண்டன் சென்ற உத்தம் சிங் அங்கு அவரை தீவிரமாக தேடிவந்தார். தனது முயற்சிகளை அவர் ஒருபோதும் கைவிடவில்லை. பகத்சிங்கின் உத்தரவின் பேரில் 1927இல் உத்தம் சிங் பஞ்சாப் திரும்பினார். அப்போது அவர் முல்தானில் ஆயுதங்களை வைத்திருந்ததற்காகவும் கதர் டி கூஞ்சின் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததற்காகவும் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டார்.
ஓ டயர் சுட்டுக்கொலை
ஆயுதச் சட்டத்தின் கீழ் 1931 வரை ஐந்து ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவர் விடுவிக்கப்பட்டவுடன் பிரிட்டிஷ் காவல்துறையினரால் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். அவர் 1934 இல் இங்கிலாந்தை அடைவதற்கு முன்பு காஷ்மீருக்குச் செல்வது தவிர்க்க முடியாததாக இருந்தது.
1940 மார்ச் 13 அன்று காக்ஸ்டன் ஹாலில் கிழக்கிந்திய சங்கத்தின் விழாவில் மைக்கேல் ஓ ட்யர் உரையாற்றுவார் என்று ஒரு போஸ்டரைப் பார்த்தார். அதைப் பார்த்து பெருமகிழ்ச்சியடைந்த உத்தம் சிங், நோட்டீஸில் குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் காக்ஸ்டன் ஹாலை அடைந்தார்.
பஞ்சாப்பில் உத்தம் சிங் அஸ்தி
ஹாலில் டயரை பார்த்ததும் அவரை உத்தம் சிங் சுட்டுக்கொன்றார். அப்போது நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, ராம் முகமது சிங் ஆசாத்தின் என்றார். நாட்டின் பெருமகன் உத்தம் சிங் 1940ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி லண்டனில் உள்ள பென்டன்வில் சிறையில் தூக்கிலிடப்பட்டார். அவரது உடல் சிறையிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
காலங்கள் பல உருண்டோட பஞ்சாப் முதலமைச்சர் கியானி ஜைல் சிங்கின் முயற்சியால், இங்கிலாந்து உத்தம் சிங்கின் அஸ்தி 1974ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி இந்தியாவிடம் ஒப்படைத்தது.
ஆங்கிலேய மண்ணில் இந்தியப் பெருமையையும், எதிர்ப்பையும் நிலைநிறுத்திய ஷாகித் உத்தம் சிங்க்கு ETV BHARAT வீரவணக்கம் செலுத்துகிறது.
இதையும் படிங்க : நாட்டின் விடுதலைக்காக அரசின் கருவூலத்தை தூக்கிக் கொடுத்த அமர் சந்திர பந்தியா!