ETV Bharat / bharat

75 Years of Independence: விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்த தியாகி சந்திர சேகர் திவாரி

நாட்டின் விடுதலைக்காக தன் இளமைக் காலத்தை அர்ப்பணித்த தியாகிகளில் ஒருவரான சந்திர சேகர் திவாரி குறித்த தொகுப்பு...

தியாகி சந்திர சேகர் திவாரி
தியாகி சந்திர சேகர் திவாரி
author img

By

Published : Dec 25, 2021, 6:14 AM IST

‘நாம் எதிரிகளின் தோட்டாக்களைத்தான் எதிர்கொள்ளப்போகிறோம்; நாம் சுதந்திரமானவர்கள்; சுதந்திரத்தை மீட்போம்’ என்ற இந்த வீர முழக்கத்திற்குச் சொந்தக்காரர் சந்திர சேகர் திவாரி. சந்திர சேகர் அசாத் என அறியப்படும் இவர் நாட்டின் விடுதலைக்காக தன் இளமைக் காலத்தை அர்ப்பணித்த தியாகிகளில் ஒருவராவார். அவரின் வாழ்வு மட்டும் அல்ல; இறப்பும் இந்திய விடுதலைப் போரில் ஒரு தீப்பொறியாகப் பெரிய புரட்சியை உருவாக்கியது.

பல புரட்சியாளர்களின் உயிர்த் தியாகத்தினால் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலம் முற்றுப்பெற்று சுதந்திரமான இந்தியா உருவானது. அத்தகைய புரட்சியாளர்களின் தியாகத்திற்குப் பலனாக நாம் தற்போது சுதந்திரமான மக்களாட்சியின்கீழ் வாழ்ந்துவருகிறோம். மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் 1906ஆம் ஆண்டு அசாத் பிறந்தார். அசாத் தனது 15ஆம் அகவையில் மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்துகொண்டார்.

பனாரஸ் (தற்போதைய வாரணாசி) ஒத்துழையாமை இயக்கத்தில் (1920-21) கலந்துகொண்டதால் அசாத் கைதுசெய்யப்பட்டு நீதிபதி முன் நிறுத்தப்பட்டார், நீதிபதியிடம் தனது பெயரைக் கூறுகையில் எனது தந்தை பெயர் “அசாத்” எனவும் (அசாத் என்றால் உருது மொழியில் விடுதலை அல்லது சுதந்திரம் பொருள்), எனது முகவரி சிறை எனவும் கூறி ஆங்கில அரசிடம் தன் விடுதலை வேட்கையை தீரமுடன் வெளிப்படுத்தினார்.

அதனைக் கேட்டு ஆத்திரமடைந்த ஆங்கிலேய அரசு காவல் துறையினரைக் கொண்டு அவரைக் கடுமையாகத் தாக்கியது. இந்த வீர நிகழ்வால் இந்திய தேசிய காங்கிரசில் புகழ்பெற்று, அன்றைய காங்கிரசின் பெரும் புள்ளியாக உருவெடுத்தார். அந்நாளிலிருந்து சந்திர சேகர் திவாரி மாற்றமடைந்து சந்திர சேகர் அசாத் என அழைக்கப்பட்டார்.

1922ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சவுரி சவுரா என்ற இடத்தில் புரட்சியாளர்கள் கும்பல், சில காவல் துறையினரைக் கொலைசெய்தனர். இதனையடுத்து, மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைக் கைவிட்டார். காந்தியின் இந்தச் செயலால் அசாத் அதிருப்தி அடைந்தார்.

மேலும் அசாத் விடுதலைப் போரில் இருந்த தீவிரவாத அமைப்பினரான இந்துஸ்தான் குடியரசு அமைப்பில் இணைந்தார். 1925 ஆகஸ்ட் 9 அன்று இந்துஸ்தான் குடியரசு அமைப்பினரால் ஒரு ரயில் கொள்ளை நடைபெற்றது. கக்கோரி ரயில் கொள்ளை இந்திய சுதந்திரப் போரில் போரிட்ட தீவிரவாத அமைப்பின் மிகப்பெரிய சம்பவம் ஆகும். அந்த அமைப்பின் ஆயுதத் தேவைக்காக இக்கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது.

இந்த ரயில் கொள்ளையில் பங்கு கொண்ட இந்துஸ்தான் குடியரசு அமைப்பைச் சேர்ந்த 10 நபர்களில் அசாத்தும் முக்கியமானவர் ஆவார். லக்னோவிலிருந்து பணத்தைச் சுமந்துசென்ற இணைப்பு ரயில் ஒன்றில் நடந்த கொள்ளைச் சம்பவம், ஆங்கிலேய அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதன் காரணமாக ஆங்கிலேய அரசு தங்களுக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டிய சிலரைச் சிறைப்பிடித்தது.

1931 பிப்ரவரி 27 அன்று அசாத் தனது நண்பர்களான ஆல்ஃபர்ட் பிரக், பிரயக்ராஜ் ஆகியோருடன் இருக்கும்போது ஆங்கிலேய காவல் படையால் சுற்றிவளைக்கப்பட்டார். தன்னிடம் இருந்த துப்பாக்கியினைக் கொண்டு தன் கூட்டாளிகளைத் தப்பிச்செல்ல வைத்தார். சில மணி நேரம் பிரிட்டிஷ் காவலர்களுடன் போராடினார், பின்னர் தப்பிப்பதற்காக ஓடிய அசாத்தை காவலர்கள் இடது காலில் சுட்டனர்.

தனது இடது காலில் காயத்துடன் தப்பிக்க இயலாது என உணர்ந்த அசாத் ஆங்கில ஆட்சியாளர்களிடம் உயிருடன் பிடிபட விரும்பாமல் தன் துப்பாக்கியில் இருந்த கடைசி தோட்டாவைக் கொண்டு சுட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார். சந்திர சேகர் அசாத் பயன்படுத்திய துப்பாக்கி அவரது நினைவாக “பம்தூல் புகாரா” என்று பெயரிடப்பட்டது. இது சிறிய ரக 1903 ஆண்டு வகையாகும்.

தியாகி சந்திர சேகர் திவாரி

அசாத்தின் உயிர் பிரிந்ததும் அந்தத் துப்பாக்கியினை ஆங்கில அலுவலர்கள் இங்கிலாந்திற்கு எடுத்துச் சென்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1976ஆம் ஆண்டு ஜூலை 3 அன்று இங்கிலாந்திலிருந்து மீட்டுக் கொண்டுவரப்பட்டது, மேலும் இத்துப்பாக்கி அலகாபாத்தின் ஆல்ஃபர்ட் அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அசாத்தின் பெருமையை இது போன்ற பல நிகழ்வுகள் நிருபிக்கின்றன. இத்தகைய வீர செயல்கள் இன்றும் நம்மிடையே நாட்டுப்பற்றைத் தூண்டுகின்றன. வீர செயல்களால் அசாத் அழியாமல் மக்களின் மனத்தில் நிலைத்து இருப்பார், இந்திய விடுதலைப் போரில் ஒரு வரலாற்றுச் சின்னமாக இருப்பார். நமது நாடு இதுபோன்ற விடுதலை வீரர்களால் பெருமைகொள்கிறது.

இதையும் படிங்க: உலியத்துக்கடவு - உப்பைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை உலுக்கிய பூமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.