ETV Bharat / bharat

75 Years of Freedom: காந்தியின் பயணம் - போர்பந்தர் To தென்ஆப்ரிக்கா - 75ஆவது சுதந்திர ஆண்டு

போர்பந்தர், காந்தி என்ற மகாத்மா பிறந்த ஊராக உலகம் முழுவதும் அறியப்படுகிறது. காந்தி அங்கிருந்து ஆப்ரிக்கா சென்று பல ஆண்டுகள் கழிந்துவிட்டாலும், தற்போது குஜராத்தின் இந்த சிறு கடலோர கிராமம் அனைத்திற்கும் சாட்சியாய் நிற்கிறது. இந்திய சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டில், போர்பந்தரை நினைவுகூர்வது இன்றியமையாதது.

75 Years of Freedom
75 Years of Freedom
author img

By

Published : Mar 15, 2022, 8:04 PM IST

தேசத்தந்தை மகாத்மா காந்தி, இந்திய நாட்டின் விடுதலைக்கு ஆற்றிய பங்களிப்பு அளவிட முடியாதது. அதுபோன்று, அவரின் தெளிவான சிந்தனைக்கு ஒப்பானதாக, அவர் பிறந்த போர்பந்தர் நகரம் விளங்குகிறது. போர்பந்தரைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் நரோட்டம் பாலன், காந்திக்கும் போர்பந்தருக்கும் உள்ள பிணைப்பு குறித்து பின்வருமாறு விளக்குகிறார்.

“நான் போர்பந்தருக்கு வந்த பின்னர், அவருடைய வாழ்வின் 'மூன்று அம்சங்கள்' எனது கவனத்தை ஈர்த்தன. நம் நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், காந்தியின் வீரத்தீரச் செயல்கள் தான் அதற்கு அடித்தளமாக அமைந்துள்ளன. காந்திக்கும், போர்பந்தருக்கும் உள்ள உறவை தொப்புளுக்கும், தொப்புள் கொடிக்கும் உண்டான உறவுடன் ஒப்பிடலாம்.

வைசிய வாணிபக் குடும்பம்:

அக்டோபர் 2, 1869இல் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி ஒரு வைஷ்ணவ வாணிபக் குடும்பத்தில் பிறந்தார். அவரின் மூதாதையர்களும் பல தலைமுறையாக வாணிபத்தை தொழிலாக மேற்கொண்டு வந்தனர்.

ஆனால், காந்திக்கு முந்தைய மூன்று தலைமுறையாக அவர்கள் யாரும் பலசரக்கு வியாபாரத்தில் இல்லாமல் பல ராஜதானிகளில் திவான்களாக இருந்தனர். மகாத்மா மோகன்தாஸ் காந்தியின் தந்தை, கரம்சந்த் காந்தி போர்பந்தருக்கு மட்டுமல்லாமல் ராஜ்கோட், வாகனேரின் திவானாக இருந்தார். வைஷ்ணவ முறைப்படி, அவர்கள் சைவ உணவு பழக்கத்தைக் கொண்டிருந்தனர். அப்போதைய வழக்கப்படி, மோகன்தாஸ் காந்தி தனது 13 வயதில் கஸ்தூரிபாயை மணந்துகொண்டார்.

போர்பந்தரில் தொடக்கக் கால கல்வி:

காந்தி ஒரு குறிப்பிட்ட வயது வரை சுமாராகப் படிக்கும் மாணவர் என்று அவரே தன்னை குறித்து கூறியுள்ளார். முதலில், போர்பந்தரில் படித்த காந்தி, மேற்படிப்புக்காக ராஜ்கோட்டிற்குச் சென்றார். 1887இல் மெட்ரிகுலேசன் படிப்பை முடித்த பின்னர், மேற்படிப்பிற்காக பம்பாய் பல்கலைகழகத்தின் உறுப்பு கல்லூரியான ஷாமல்தாஸ் கல்லூரியில் காந்தி சேர்ந்தார்.

அப்போது, அவரது குடும்பத்தில் பலரும் உயர் பதவிகளில் இருந்ததால், காந்தியின் குடும்பம் அவரை வழக்கறிஞராக்க நினைத்தது. அதனால், அவர் இங்கிலாந்து சென்றார்.

மோகன்தாஸ் - மகாத்மா:

காந்தி தனது கல்விக்காக, போர்பந்தர் - ராஜ்கோட், ராஜ்கோட் - இங்கிலாந்து என பறந்துகொண்டிருந்தார். இவை அனைத்தும் காந்தியின் வாழ்வை மாற்றின. இங்கிலாந்தில் படிப்பை முடித்து இந்தியா வந்த சில மாதங்களில், அதாவது 1983இல் காந்தியை தென்னாப்பிரிக்காவுக்கு தாதா அப்துல்லா என்பவர் வழக்கறிஞர் பணிக்கு அழைத்தார்.

குஜராத்தில் இருந்து தென்னாப்பிரிக்கா சென்ற காந்தி 21 ஆண்டுகள் அங்கு வாழ்ந்தார். மேலும், மோகன்தாஸ் காந்தி, மகாத்மா காந்தியாக உருமாறுவதற்கு அந்த 21 ஆண்டுகளும் ஒரு காரணம் எனப் பல வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

நெல்சன் மண்டேலா இப்படி சொல்வார்,"நீங்கள் மோகனை கொடுத்தீர்கள்; நாங்கள் மகாத்மாவாக திருப்பிக் கொடுத்தோம்" என்று.

போர்பந்தரும் தென்னாப்பிரிக்காவும்:

காந்தி, தென்னாப்பிரிக்காவில் நிலவிய ஆங்கிலேயரின் கொடுங்கோன்மையை கடுமையாக எதிர்த்தார். அவர் திவானின் மகனாக பெற்ற அனுபவமும், தென்னாப்பிரிக்காவில் பெற்ற கள அனுபவமும் சுயமாக சிந்திக்கும் திறனை அவருக்கு அளித்துள்ளது.

முதலில், காந்திக்கு ஓராண்டு மட்டும் தென்னாப்பிரிக்காவில் வசிக்க அனுமதி கிடைத்தது. அங்கு தாதா அப்துல்லாவிற்கும், சவேரி சேட்டுக்கும் இடையிலான வழக்கில் வாதாட காந்தி அங்கு சென்றிருந்தார். தற்போதும், போர்பந்தரில் சவேரி, அப்துல்லா ஆகியோரின் கல்லறைகளை காணலாம். ஆம், காந்தியைப் போலவே, வழக்கின் இருதரப்பும் போர்பந்தரைச் சேர்ந்தவர்கள் தான்.

தென்னாப்பிரிக்க இந்து சமூகம்

தென்னாப்பிரிக்கா இந்து சமூகத்தில் காந்தி நல்ல பிரபலமானார். இதனால், ஓராண்டு விசா முடிந்தபோதும், அவரை தென்னாப்பிரிக்காவிலேயே இருக்கும்படி அங்குள்ள இந்து மக்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே, ஓராண்டுக்காக தென்னாப்பிரிக்கா வந்தவர் 21 ஆண்டுகளை கழித்துவிட்டுச் சென்றார். அங்கு வழக்கறிஞராக பணியாற்றிய காந்தி தான், அன்றைய காலகட்டத்தில் அதிகம் வருமானம் பெற்ற வழக்கறிஞராக இருந்தார்.

காந்தியின் சத்தியாகிரகப்போராட்ட உணர்வு என்பது தென்னாப்பிரிக்காவிலேயே தொடங்கிவிட்டது. 1907இல் ஆங்கிலேயர்களின் கடுமையான ஆட்சியை எதிர்த்து முதல் சத்தியாகிரகத்தை தலைமை தாங்கி நடத்தினார். ஏனென்றால், ஆங்கிலேயர்களின் மிருகத்தனமான சக்திக்கு எதிராக நம்மால் எதிர்த்து சண்டையிட முடியாது. ஆனால், அகிம்சை வழியில் போராடினால் கண்டிப்பாக வெல்ல முடியும் என காந்தி அப்போதே உணர்ந்துவிட்டார்.

காந்தியின் வாழ்வில் சமணமதம் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது. ஸ்ரீமத் ராஜ்சந்திரா அவருக்கு குருவாக இருந்தார். அவர்தான் காந்திக்கு ரஸ்கினின் படைப்புகளையும், டால்ஸ்டாயின் படைப்புகளையும் அறிமுகப்படுத்திவைத்துள்ளார். இதைத்தொடர்ந்து, காந்தி தென்னாப்பிரிக்காவில் பீனிக்ஸ் மடாலயத்தையும் (1907), டால்ஸ்டாய் மடாலயத்தையும் அமைத்து, வழக்கறிஞர் பணிக்கு இடையில் சமூகப்பணியையும் ஆற்றி வந்தார்.

வரலாற்று சாட்சியாக நிற்கும் போர்பந்தர்:

தென்னாப்பிரிக்கா, அவருக்கு மனிதநேயத்தின் உச்சத்தையும், வாழ்வின் யதார்த்தத்தையும் காட்டியது. அதையடுத்து, காந்தி 1915இல் குரு கோபால் கிருஷ்ணாவின் அழைப்பின் பேரில் இந்தியா வந்தார். அப்போது, இந்தியாவில் பல மொழிகளும், பல்வேறு பாரம்பரியமும் கொண்ட தேசம் என்று. இந்திய பயணத்திற்குப் பின், அவர் கோச்சாராப் ஆஷ்ரமம், சபர்மதி ஆஷ்ரமம், வார்தா ஆஷ்ரமம் அமைத்தார்.

காந்திஜியின் கீதையின் மொழிபெயர்ப்பு அவரது இறையியல் புரிதலுக்கு அற்புதமான எடுத்துக்காட்டு. அவர் கீதையை கவனமாகப் படித்து, ‘நான் ஒரு பெரிய பண்டிதரோ அல்லது ஆச்சார்யரோ அல்ல. ஆனால், இந்தக் கீதையின் படிப்பினைகள் என் வாழ்க்கையில் செயல்படுத்தப்பட்டுள்ளன என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன்’ என்று குறிப்பிட்டார். இதன் விளைவாக, காந்தி பகவத் கீதையின் விதிகளின்படி தனது வாழ்க்கையை வாழ்ந்தார்.

காந்தியின் அத்தனை முடிவுகளுக்கும், கருத்துகளுக்கும் போர்பந்தர் ஒரு சாட்சியாக நிற்கிறது. இந்தியாவின் 75ஆவது விடுதலை ஆண்டில் அதை நினைவுகூர்வது என்பது இன்றியமையாதது"என்றார்.

இதையும் படிங்க: உலியத்துக்கடவு - உப்பைப் பயன்படுத்தி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை உலுக்கிய பூமி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.