கரோனா இரண்டாம் அலையில் 730 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், மாநில வாரியாக உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கையையும் வெளியாகியுள்ளன.
மாநிலம் | உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை |
டெல்லி | 109 மருத்துவர்கள் |
உத்தரப் பிரதேசம் | 79 மருத்துவர்கள் |
ஆந்திரப்பிரதேசம் | 38 மருத்துவர்கள் |
தெலங்கானா | 37 மருத்துவர்கள் |
கர்நாடகா | 9 மருத்துவர்கள் |
கேரளா | 24 மருத்துவர்கள் |
ஒடிசா | 31 மருத்துவர்கள் |
மகாராஷ்டிரா | 23 மருத்துவர்கள் |
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில், புதிதாக மேலும் 62,224 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து ஒன்பதாவது நாளாக தொற்று பாதிப்பு 5 விழுக்காட்டுக்கும் கீழாக உள்ளது.
கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர்களின் விகிதம் 95.80 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 2,542 பேர் கரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா 3ஆவது அலைக்குத் தயாராக இருக்க உத்தரவு