சூரத் (குஜராத்): குஜராத் மாநிலத்தின் சூரத் பகுதியில் உள்ள அம்போலி பகுதியைச் சேர்ந்தவர், 70 வயதான கபிலாபென் ராமானந்தி. இவர் காலையில் கழிவறைக்குச்செல்லும்போது எதிர்பாராத விதமாக பள்ளத்தில் விழுந்துள்ளார். மழையின் காரணமாக கழிவறை குழியின் மேற்பகுதி தளர்வாக இருந்ததே, இதற்குக் காரணமாக அறியப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர், மீட்புப்பணியில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் கடுமையான முயற்சியால், பாதுகாப்பு பெல்ட் கட்டிய நிலையில் மூதாட்டி மீட்கப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஆந்திர ஆட்டோ மீது மின்சாரம் பாய்ந்ததற்கு காரணம் அணில் - மின்சாரத்துறை விளக்கம்