பீட்(மகாராஷ்டிரா): மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்வி கிராமத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அம்பஜோகையில் உள்ள ராடி கிராமத்திற்கு இன்று (ஏப்ரல் 23) ஜீப்பில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, காலை 10.30 மணியளவில் அம்பஜோகை தாலுகா, சைகான் கிராமத்திற்கு அருகே ஜீப் சென்று கொண்டிருந்த போது, எதிர்திசையில் இருந்து வந்த டிரக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஜீப் மீது வேகமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பெண்கள், குழந்தைகள் உள்பட 11 பேர் காயமடைந்தனர். இது குறித்து, தகவலறிந்து சென்ற காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு அம்பஜோகையில் உள்ள சுவாமி ராமானந்த் தீர்த்த கிராம அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து ஒருவர் பலி... தொடரும் சம்பவங்களால் வாகனவோட்டிகள் அச்சம்...