ETV Bharat / bharat

புதுச்சேரி 5 மணி நிலவரம்: 74.52 விழுக்காடு வாக்குகள் பதிவு

புதுச்சேரி: மாலை 5 மணி நேரம் நிலவரப்படி, மொத்தமாக 74.52 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Puducherry election
புதுச்சேரி
author img

By

Published : Apr 6, 2021, 6:01 PM IST

புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கான தேர்தல் இன்று(ஏப்ரல்.6) காலை 7 மணிமுதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் 10 லட்சத்து 4 ஆயிரத்து 507 வாக்காளர்கள் உள்ளனர். இந்தத் தேர்தலில் சுயேச்சை உட்பட 324 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 635 இடங்களில் 1,558 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பணியில் 6 ஆயிரத்து 835 பேர் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் காலைமுதல் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

பாதுகாப்பிற்காக வாக்குச்சாவடிகள் அனைத்திலும் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல் துறையினரும், 40 கம்பெனி துணை ராணுவப்படை வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மாலை 5 மணி நிலவரப்படி 74.52 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.

மேலும், மாலை 6 மணிக்கு பிறகு உடல் வெப்பம் அதிகம் உள்ளவர்கள், கரோனா நோயாளிகள் வாக்களிக்கப்பட உள்ளதால், புதுச்சேரியில் 80 விழுக்காட்டிற்கும் மேல் வாக்குகள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதையும் படிங்க: ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தின் கார் மீது தாக்குதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.