குஜராத்: மீன்பிடி தொழில் செய்து வரும், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 100 குடும்பங்கள், தங்களை கருணைக் கொலை செய்யக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதில், "குஜராத் மாநிலம் போர்பந்தரில் உள்ள கோசபரா (Gosabara)துறைமுகத்தில் படகுகளை நிறுத்த, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த தடை உத்தரவால், மீன்பிடி படகுகள் மற்றும் உரிமம் இருந்தும் தங்களால் மீன்பிடிக்க முடியவில்லை என்றும், இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஆளுநர், முதலமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலருக்கும் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை, அதனால் வருவாய் இன்றி தவித்து வரும் தங்களை கருணை கொலை செய்ய வேண்டும்" என்று கோரியுள்ளனர்.
இந்த மனு உயர்நீதிமன்றத்தின் கோடை விடுமுறைக்குப் பிறகு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:Go back Chidambaram: கொல்கத்தா நீதிமன்ற வளாகத்தில் நடந்தது என்ன?