ETV Bharat / bharat

Koppal Accident: லாரிக்கு அடியில் சிக்கிய கார்.. 6 பேர் உடல் நசுங்கி பலி! - Koppal news in Tamil

கர்நாடக மாநிலம், கொப்பல் மாவட்டத்தில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : May 29, 2023, 7:36 AM IST

பெங்களூரு: கொப்பல் மாவட்டம், குஸ்டகி தாலுகாவில் உள்ள கலகேரி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, அதே சாலையில் லாரி ஒன்றும் வந்து கொண்டிருந்தது. இதனிடையே, திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் அதிவேகத்தில் எதிரே வந்த லாரியின் மீது மோதி விபத்துள்ளனாது. லாரியின் முன்பக்கத்தின் அடிப்பகுதியில் கார் முழுவதுமாக மாட்டிக்கொண்டதில் கார் அப்பளம் போல நொறுங்கியது.

இந்த பயங்கர விபத்தை அடுத்து, அப்பகுதியினர் காரில் இருந்தவர்களை மீட்க முயன்ற போது, காருக்குள் இருந்த அனைவரும் உடல் நசுங்கி உயிரிழந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனைத்தொடர்ந்து, இந்த பயங்கர விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குஸ்டகி காவல்நிலைய போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பினர்.

முதல் கட்ட விசாரணையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் ராஜப்பா பனகோடி, ராகவேந்திரா, அக்ஷயா சிவசரண், ஜெயஸ்ரீ, ராக்கி மற்றும் ராஷ்மிகா ஆகியோர் எனவும் இதில் இருவர் குழந்தைகள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையும் படிங்க: புதிய நாடாளுமன்றம் நோக்கி மல்யுத்த வீரர்கள் பேரணி... குண்டுக் கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்!

இது குறித்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் வாடகை காரில் விஜயப்புராவில் இருந்து பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தனர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், கொப்பல் மாவட்டம் குஸ்டகி அருகே கலகேரி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, காரின் டயர் வெடித்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்வாறு தாறுமாறாக ஓடிய கார், அதன் எதிரே வந்த லாரியின் மீது பயங்கரமாக மோதியதும் இதனால், காரில் இருந்த ஆறு பேரும் பரிதாபமாக உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது.

  • Karnataka | 6 people died after a car collided with a lorry in Koppal district. CM Siddaramaiah has announced Rs 2 lakhs compensation to the kin of victims: Karnataka CMO pic.twitter.com/eeBQbVmRei

    — ANI (@ANI) May 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும், இது குறித்து குஸ்டகி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து, இந்த பயங்கர விபத்தில் உயிரிழந்த ஆறு பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ‘எங்கள சாவுக்கு கூட போக கூடாதுனு சொல்றாங்க’ - மழலைக் குரலில் மனு அளித்த 5ஆம் வகுப்பு மாணவி - நடவடிக்கை தேவை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.