மாஸ்கோ (ரஷ்யா): சோமாலியா நாட்டின் தலைநகர் மொகாதிஷுவிலுள்ள வபேரி காவல் நிலையம் அருகே நிகழ்த்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு காவல் அலுவலர்கள் உள்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.
இத்தகவலை சோமாலியா நாட்டின் தகவல், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, சோமாலியா பிரதமர் முகமது ஹூசைன் ரோபள் வெளியிட்ட ட்விட்டரில், மொகாதிஷு வபேரி காவல் நிலையம் அருகே நடந்த தீவிரவாதத் தாக்குதல் கோழைத்தனமானது என்றும், இச்சம்பவத்தில் இரண்டு காவல்துறை அலுவலர்கள் உள்பட ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்பில் பலியானவர்கள் குடும்பத்தினத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று (மே.9) மாலை காவல்நிலைய முன்புறத்திலுள்ள கேட் அருகே வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனத்துடன் வந்த நபர் வெடிக்கச் செய்ததாகவும் தெரியவந்தது.
இதையும் படிங்க: டெல்லியில் இலவசமாக ஆயுஷ் 64 மருந்து விநியோகம்!