டெல்லி : தலைநகர் டெல்லியில் கார்பன் மோனாக்சைடு நச்சு வாயுவை சுவாதித்த ஒரே குடும்பத்தை 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாஸ்திரி பார்க் பகுதியில் உள்ள குடியிருப்பில் 9 பேர் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று (மார்ச் 31) இரவு வழக்கம் போல் தூங்கச் சென்ற நிலையில், கொசு விரட்டியை வைத்து உள்ளனர்.
நள்ளிரவில் கொசு விரட்டி மெத்தையில் விழுந்து அதிக புகையை வெளியேற்றியதாக கூறப்படுகிறது. அதிக நச்சுத் தன்மை கொண்ட கார்பன் மோனாக்சைடு வாயு வெளியேறிய நிலையில் அதை சுவாசித்த 6 பேர் மயக்க மடைந்து உள்ளனர். மேலும் மெத்தையில் விழுந்த கொசு விரட்டி தீ பற்றியதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து இன்று (மார்ச் 31) காலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மயக்க நிலையில் கிடந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பினர். இதில் குழந்தை, பெண் உள்பட 6 பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.
மீதமுள்ள 3 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், மீதமுள்ள இருவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். அதிக நச்சுத் தன்மை கொண்ட கார்பன் மோனாக்சைடு வாயுவை சுவாசித்ததால் 6 பேர் உயிரிழந்தது விசாரணையில் தெரிய வந்து உள்ளதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : ஏப்ரல் 1 முதல் இவையெல்லாம் மாறுது.. அவசியம் படிங்க மக்களே!