2019- 2020 ஆம் ஆண்டுகளில், யானைகள் தாக்கியதில் 586 பேர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில், " 2020இல் புலி தாக்கியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது. 2019இல் 50 பேரும், 2018இல் 31 பேரும், 2017இல் 44 பேரும், 2016இல் 62 பேரும் உயிரிழந்துள்ளனர்.
அதே போல், யானைகள் தாக்கியதில் 2019-20இல் 586 பேரும், 2018-19இல் 452 பேரும், 2017-18 இல் 506 பேரும், 2016-17இல் 516 பேரும், 2015-16இல் 469 பேரும் உயிரிழந்துள்ளனர்.
வனவிலங்குகளின் வாழ்விடங்களை மேம்படுவதற்காக, பல்வேறு திட்டங்களின் கீழ் ஆண்டுதோறும் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டு வருவது. வனவிலங்குகள் பாதிப்பால் ஏற்படும் சேதங்களுக்கும் இழப்பீடுகள் அளிக்கப்படுகிறது.
வனவிலங்கு ஏற்படுத்திய சேதம் | நிவாரண தொகை |
உயிரிழப்பு | 5 லட்சம் வரை |
பலத்த காயம் | 2 லட்சம் வரை |
சிறிய காயம் | சிகிச்சை செலவு 25 ஆயிரம் வரை |
சொத்து/ பயிர் இழப்பு | மாநிலங்கள் தீர்மானிக்கும் பரிந்துரைப்படி பணம் வழங்கலாம் |
இதையும் படிங்க: தெலங்கானா கார் விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!