ETV Bharat / bharat

577 மீனவர்கள் பாகிஸ்தானின் பிடியில் இருப்பதாக மக்களவையில் தகவல்! - இதுவரை 1,164 இந்திய மீனவர்களின் படகுகள் பாகிஸ்தான் அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

மக்களவையில் இன்று பேசிய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அண்டை நாடான பாகிஸ்தானின் பிடியில் இந்திய மீனவர்கள் ஏறக்குறைய 577 பேர் சிக்கியுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் அவர்களை மீட்க இந்திய அரசு முயற்சி செய்வதாகவும் கூறினார்.

577 மீனவர்கள் பாகிஸ்தானின் பிடியில் இருப்பதாக லோக்சபாவில் தெரிவிக்கப்பட்டது.

author img

By

Published : Mar 25, 2022, 9:20 PM IST

டெல்லி: இந்திய மீனவர்கள் 577 பேரை பாகிஸ்தான் அரசு சிறைப்பிடித்துள்ளதாகவும், அவர்களை மீட்பதற்கு இந்திய அரசு முயற்சி எடுத்து வருவதாகவும் இன்று (மார்ச் 25) மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வீ முரளிதரன் கூறுகையில், ‘ எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய மீனவர்கள் 577 பேரை பாகிஸ்தான் அரசு பிடித்துள்ளது’ எனத் தெரிவிததார்.

மே 21, 2008இல் கையெழுத்திடப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் "தூதரக அணுகல் ஒப்பந்தத்தின்"படி, ஒவ்வொரு நாட்டின் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள சிவில் கைதிகள் மற்றும் மீனவர்களின் பட்டியல்கள் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 அன்று பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. இதன் அடிப்படையில் இந்த மீனவர்களின் எண்ணிக்கை விவரம் பரிமாறப்பட்டுள்ளது.

மேலும் அவர் கூறுகையில், 'இந்திய அரசின் தகவலின்படி இதுவரை 1,164 இந்திய மீனவர்களின் படகுகள் பாகிஸ்தான் அரசால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் பாகிஸ்தான் அரசு இந்த படகுகளைப் பற்றி எந்த தகவலும் அளிக்கவில்லை. பாகிஸ்தானின் இத்தகைய செயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் இந்திய மீனவர்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும். இத்தகைய கைதுகளை முன்கூட்டியே தடுக்க பாகிஸ்தான் அரசிடம் பேச்சு வார்த்தை நடத்த இருப்பதாகவும்’ தெரிவித்தார்.

பாகிஸ்தானிடமிருந்து மீட்கப்பட்ட மீனவர்கள் விவரம்

பாகிஸ்தான் அரசால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களில் 2014ஆம் ஆண்டு வரை 2,140 மீனவர்களும், 57 படகுகளும் மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் கூறினார். இந்த விவகாரத்தில் அரசு உடனடியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், மீனவர்களின் கோரிக்கை மீது இந்தியத் தூதரகம் துரிதமாக செயல்படுகிறது எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க:உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக யோகி பதவியேற்பு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.