ETV Bharat / bharat

ராஜஸ்தானில் 53 மயில்கள் பலி; 26 காயம்! - கல்வா கிராமத்தில் 53 மயில்கள் பலி

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கல்வா கிராமத்தில் 53 மயில்கள் பலியாகியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மயில்
மயில்
author img

By

Published : Jan 1, 2021, 9:58 PM IST

ராஜஸ்தான் மாநிலம் நாகூர் மாவட்டம் கல்வா கிராமத்தில் 53 மயில்கள் பலியாகி கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, படுகாயம் அடைந்துள்ள 26 மயில்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரசு நிலத்தில் கிடந்த மயில்களின் உடலைக் கண்ட கிராம பஞ்சாயத்து தலைவர், காவல் துறையினருக்குத் தகவல் அளித்தார்.

உடற்கூராய்வு மேற்கொண்ட பிறகு, மயில்கள் உயிரிழந்ததன் காரணம் குறித்து தெரியவரும் என வனத் துறை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, நாகூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் தீத்வானா சஞ்சய் குப்தா, பல வனத் துறை அலுவலர்களின் முன்னிலையில், உயிரிழந்த மயில்களின் உடல்களுக்கு எரியூட்டப்பட்டது.

வனத்துறை அலுவலர்

அதேபோல், 2019ஆம் ஆண்டு, நைன்வா பகுதியில் 250 மயில்களும் நாகூர் பகுதியில் 300 மயில்களும் உயிரிழந்து கிடந்தன. இந்தாண்டு, மட்டும் 85 மயில்கள் உயிரிழந்துள்ளன. தேசிய பறவையான மயில், வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுகிறது. முன்னதாக, ஜலவர், ஜோத்பூர் மாவட்டங்களில் 100-க்கும் மேற்பட்ட காகங்கள் உயிரிழந்து கிடந்தன.

இதனைத் தொடர்ந்து, அதனைச் சுற்றியுள்ள 1 கிமீ தொலைவுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. காகங்களின் இறப்புக்கு காரணம் ஏவியன் காய்ச்சல் என தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய் ஆய்வகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.