உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சமோலி மாவட்டத்தில் உள்ள தபோவன்-ரேனி பகுதியில் பிப்.7ஆம் தேதி காலை பனிப்பாறைகள் திடீரென உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்கு ரிஷிகங்கா மின்திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அப்பகுதியில் வசித்தவர்களின் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த பாதிப்பில் 200க்கும் மேற்பட்டோர் மாயமானதாகக் கூறப்படுகிறது. இதுவரை வெள்ளபாதிப்பில் உயிரிழந்த 50 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. அதில் 25 பேரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.
மீதமுள்ள 154 பேரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள காவல்துறை, புனரமைப்புப் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மேடையில் மயங்கிவிழுந்த குஜராத் முதலமைச்சர்: தொலைபேசியில் நலம் விசாரித்த பிரதமர் மோடி