ETV Bharat / bharat

இளைய தலைமுறையினருக்கு அவசியமான 5 கூடுதல் ஊட்டச்சத்துக்கள் - சூரிய ஒளியின் மூலம் வைட்டமின் D

நவீன வாழ்க்கை முறை பிரச்சினைகளை எதிர்த்துப் போராட, அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைபிடிப்பது முக்கியம்.

Etv Bharatஇன்றைய தலைமுறையினருக்கு அவசியமான 5 கூடுதல் ஊட்டச்சத்துக்கள்

author img

By

Published : Oct 18, 2022, 6:51 PM IST

Updated : Nov 28, 2022, 4:03 PM IST

டெல்லி: கடந்த சில ஆண்டுகளாக நமது உணவு பழக்க வழக்கங்கள், நாம் வாழும் வாழ்க்கை நடைமுறைகளுடன் ஒத்துப்போகமால் உள்ளன. மேலும் நமது அன்றாட வாழ்க்கைக்கும் கூடுதலான தேவைகள் அதிகரித்துள்ளன. இதிலும் குறிப்பாக இன்றைய இளைய தலைமுறையினருக்கு இது அவசியமானது ஆகும். ஏனெனில் அவர்களின் வாழ்க்கையில் மனஅழுத்தம், ஒழுங்கற்ற தூக்கம், துரித உணவு, உடல் உழைப்பு இல்லாமை போன்றவை சாதாரணமான ஒரு நடைமுறையாக உருவாகி விட்டன.

இந்த நவீன வாழ்க்கை முறை பிரச்சினைகளை எதிர்த்துப் போராட, அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ஆரோக்கியமான உணவு பழக்கத்தை கடைபிடிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இருப்பினும் நமது அனைத்து ஊட்டச்சத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய ஒரு சில உணவுகள் மட்டும் போதாது. இதற்காக கூடுதல் ஊட்டச்சத்துக்கள் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது. ஆனால், பல சப்ளிமெண்ட்கள் இருப்பதால், சரியானவற்றை தேர்வு செய்ய உதவும் பட்டியல் இதோ.

மல்டிவிட்டமின்கள்(Multivitamins)

மல்டிவைட்டமின்கள் என்பது உடலுக்குத் தேவையான விட்டமின்கள் மற்றும் தாதுக்களைக் கொண்ட கூடுதல் சப்ளிமெண்ட்ஸ் ஆகும். நமது அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உணவில் இருந்து பெறுவது சிறந்தது என்றாலும், பலரால் தங்களது ஊட்டச்சத்து தேவைகளை உணவின் மூலம் மட்டுமே பூர்த்தி செய்ய முடியாது. எனவே மல்டிவி ட்டமின்கள் நமது உணவில் உள்ள ஊட்டச்சத்து இடைவெளிகளை நிரப்புகின்றன. நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன.

இதன் மூலம் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை கிடைப்பதன் விளைவாக நம் உடலை நோய்கள் மற்றும் குறைபாடுகளிலிருந்து பாதுகாக்கலாம். மேலும் இதய நோயைக் குறைக்கவும், புற்றுநோயைத் தடுக்கவும், ஆரோக்கியமான உடல் நிலையை சீராக்கவும் உதவுகின்றன.

நமது தினசரி சவால்களை எதிர்கொள்ள தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வைட்டமின்கள் காரண்மாகும். இது போன்ற வைட்டமின்கள் ஆன்லைன் மூலமும், பல மருந்தகங்களிலும் ஏராளமாக உள்ளன. மல்டி வைட்டமின்கள் ஆண்கள் மற்றும் பெண்களின் தேவைகளின் அடிப்படையில் வேறுபடுகின்றன.

ஒமேகா 3

ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஆரோக்கியமான உடலை பராமரிக்க கூடிய முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். இது நமது உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. இதன் விளைவாக ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம் மற்றும் நலமான இதயம் சீராக செயல்படுகிறது. ஒமேகா-3 மூன்று கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளது. அவை அல்பலினோலினிக் அமிலம் (ஏஎல்ஏ), ஈகோசாபென்டெனோயிக் அமிலம் (இபிஏ) மற்றும் டோகோசாஹெக்ஸெனோயிக் அமிலம் (டிஹெச்ஏ) ஆகியவைகள் ஆகும்.

ஒமேகா-3 நமது உடலால் உற்பத்தி செய்ய முடியாத ஒரு அத்தியாவசிய கொழுப்பு ஆகும். நமது உணவுதான் அதற்கு ஆதாரமாக உள்ளது. ஒமேகா -3 தேவைகளைப் பூர்த்தி செய்ய உணவு போதுமானதாக இல்லாத பட்சத்தில், மீன் எண்ணெய் போன்ற சப்ளிமெண்ட்ஸ்களை எடுத்துக் கொள்ளலாம். இதில் ஒமேகா-3 இன் சத்தும், உடலுக்குத் தேவையான பிற ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவையும் நிறைந்துள்ளன.

நமது உடலில் போதுமான அளவு ஒமேகா-3 இருக்கும் போது சீரான சுவாசம், பாதிக்காத இருதய செயல்பாடு, நரம்பு மண்டலம் மற்றும் தசைக்கூட்டு ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும் மனித உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையையும் இது மேம்படுத்துகிறது. கூடுதலாக ஒமேகா-3 கழுத்து மற்றும் கீழ் முதுகு வலியை நிவாரணம் அடையச் செய்கிறது.

விட்டமின் டி

நமது உடல்கள் சூரிய ஒளியின் மூலம் வைட்டமின் D ஐ உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருந்தாலும், சூரியன் மட்டும் எப்போதும் நமது உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில்லை. மேலும் குறைந்த அளவு சூரிய வெளிப்பாடு போன்ற காரணிகள் இதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. விட்டமின் டி மூலம் பூர்த்தி செய்யப்படாத தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இந்த சப்ளிமெண்ட்ஸ் நமது உடலின் தசை வலிமை, எலும்பு உறுதி மற்றும் இரத்த அழுத்தத்தை பராமரிக்க அவசியமாகும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலியைப் போக்கவும் உதவுதாக சில ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

பயோட்டின்

விட்டமின் எச் (H)என்றும் அழைக்கப்படும் பயோட்டின் ரக விட்டமின் பி காம்ப்ளக்ஸ் விட்டமின்களின் குடும்பத்தைச் சேர்ந்தது. பயோட்டின் உடலில் கெரட்டின் உற்பத்தியைத் தூண்டுவதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான முடி வளரும்.மேலும் இதன் மூலம் உருவாகும் கொழுப்பு அமிலங்களின் உற்பத்தி சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. நமது சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது என ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.

இது தவிர, நமது உணவில் உள்ள பயோட்டின் நமது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. வேகமான அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகள் உண்பதாலும், சமநிலையற்ற உணவு முறையாலும் அடிக்கடி நமது செரிமான செயல்முறைகளில் தாக்கம் ஏற்படுகிறது. இது போன்ற சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்களை உடைப்பதில் பயோட்டின் செரிமானத்திற்கு உறுதுணையாக செயல்படுகிறது.

தாவர அடிப்படையிலான புரதம்(Plant-based protein)

இயல்பாக அசைவ உணவு உண்பவர்களுக்கு, அவர்களுக்குத் தேவையான புரதங்கள் மாமிச உணவுகளில் இருந்து கிடைக்கின்றன. சைவ உணவுகளை மட்டும் உண்ணக்கூடிய சிலருக்கு தாவரங்களில் இருந்து புரதங்கள் கிடைக்கின்றன. உதாரணமாக பட்டாணி மற்றும் பழுப்பு அரிசி கலவை ஆகியன அடங்கும். இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் முழுமையான அமினோன்ங்கள் உள்ளன.

விலங்குகளின் மாமிசங்களில் உள்ள புரதங்களை விட தாவர அடிப்படையிலான உணவுகளில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாகவும், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால் இவை உடலுக்கு வேலை செய்ய தேவையான சரியான அளவில் சத்துக்களை வழங்குகிறது. மேலும் இன்றைய தலைமுறையினரின் சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு இது சிறப்பான ஒத்துழைப்பு தருகிறது.

மோர் போன்ற புரதங்கள் போல் இல்லாமல் இவை சிறப்பான விளைவுகளைத் தருகிறது. மோர் பசுவின் பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது மற்றும் லாக்டோஸைக் கொண்டுள்ளது. ஆனால் தாவர அடிப்படையிலான புரதம் சைவ உணவு உண்பவர்களுக்கு அல்லது லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்களுக்கு ஒரு நல்ல தேர்வு ஆகும். மோரில் உள்ள புரதத்துடன் ஒப்பிடும்போது அவை நம் உடலால் சிறப்பாக உறிஞ்சப்படுகின்றன. இதன் விளைவாக, உடல் தசை வலிமை பெறுகிறது. சீரான ஆற்றல் மற்றும் சகிப்புத்தன்மையை உடலுக்கு வழங்குகிறது.

சப்ளிமெண்ட்ஸ் நன்கு சமச்சீரான உணவுக்கு மாற்றாக இல்லை என்றாலும், அவை ஆரோக்கியமாக இருக்க உதவும் அத்தியாவசிய தினசரி ஊட்டச்சத்துக்களை நமக்கு வழங்குகின்றன. எனவே, துணைப் பொருட்களை உணவில் சேர்த்து கொள்வது உகந்த ஆரோக்கியத்தை நோக்கிய ஒரு இன்றியமையாத செயலாகும்.

இதையும் படிங்க:இதயம் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்! இன்று உலக இதய தினம்!!

Last Updated : Nov 28, 2022, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.