பாட்னா: பிகார் மாநிலம் நவாடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்துகொண்டனர். அந்த குடும்பத்தை சேர்ந்த சிறுமி கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து நவாடா போலீசார் தரப்பில், இந்த சம்பவம் நேற்றிரவு (நவம்பர் 11) நடந்துள்ளது. உயிரிழந்தவர்கள் கேதர் லால் குப்தா, அவரது மனைவி அனிதா தேவி, மகள் குரியா குமாரி (20), சப்னம் குமாரி (19), பிரின்ஸ் குமார் (17) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களது கடைசி மகள் சாக்ஷி குமாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அனைவரும் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து சாக்ஷியிடம் விசாரித்தப்போது, கேதர் லால் குப்தா, மணீஷ் குமார் என்பவரிடம் கடன் வாங்கியதும் அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாததால் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. குறிப்பாக மணீஷ் குமார் தினமும் மூன்று முதல் நான்கு பேருடன் குப்தா வீட்டிற்கு சென்று கடனை திருப்பிக்கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மொத்த குடும்பமும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது. அதன்பின் நேற்று தற்கொலை சம்பவம் நடந்துள்ளது என்பது தெரியவந்தது. அதன்பின் அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவயிடத்திற்கு விரைந்து உடல்களை மீட்டோம். மணீஷ் குமார் மற்றும் அவரது கூட்டாளிகளை தீவிரமாக தேடிவருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: சிசிடிவி: பஞ்சாப்பில் தேரா சச்சா சவுதா ஆதரவாளார் சுட்டுக் கொலை