ஆக்ரா: உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டத்தில் உள்ள பிரதாப் புரா கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் செப்டிங் டேங்க் குழி தோண்டும் பணியில் சிறுவர்கள் மூவர் உள்பட அவரின் உறவினரும் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட நீதித்துறை நடுவர் விசாரணை நடத்திவருகிறார். உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூராய்வுக்காக எஸ்.என். மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதலமைச்சர், நிவாரணமாக உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் அறிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் ஹரி மோகன் (17), அனுராக் (14), மற்றும் அவினாஷ் (16) ஆகிய மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களை காப்பாற்ற சென்ற உறவினரான சோனு சர்மாவும் (32), பக்கத்து வீட்டைச் சேர்ந்த யோகேஷ் பாகேலும் (20) உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.