ஸ்ரீநகர்: புல்வாமா மாவட்டம் டிரால் அருகே உள்ள பழத்தோட்டத்தில் இருந்து பாதுகாப்பு படையினர் ஐந்து கிலோ அளவிலான வெடிப்பொருளை நேற்று ( ஜூன்.7) கண்டறிந்தனர்.
இதுகுறித்த புலனாய்வு தகவலின் அடிப்படையில், "ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் (ஆர்ஆர்), ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் ஆகியோர் கூட்டாக இணைந்து காலை 10:45 மணிக்கு பழத்தோட்டத்தில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது 5 கிலோ அளவிலான வெடிப்பொருள் மீட்கப்பட்டது" என கூறப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட வெடிப்பொருள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், தெற்கு காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்க பயங்கரவாதிகள் எடுக்கும் எந்தவொரு முயற்சியையும் பாதுகாப்புப் படைகள் முறியடிக்கும் எனவும் காவல் துறை தெரிவித்துள்ளது.
கடந்த மே 31ஆம் தேதி தெற்கு காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் உள்ள பன்ஸ்காம் கிராமத்தில் ஆயுதப்படையின் கூட்டுக்குழு ஐஇடி (IED) வெடிகுண்டு சாதனத்தை கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.