சுரேந்திரநகர்: குஜராத் மாநிலம், மேதன் கிராமத்தைச்சேர்ந்த 4 சிறுமிகள், ஒரு சிறுவன் என ஐந்து சிறார்கள், கிராமத்திற்கு அருகே உள்ள குளத்தில் குளிக்கச்சென்றனர். குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக ஐந்து பேரும் நீரில் மூழ்கியதாகத் தெரிகிறது.
நீண்ட நேரமாக சிறுமிகள் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் தேட ஆரம்பித்தனர். அப்போது, ஒரு சிறுமியின் உடல் குளத்தில் மிதந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச்சென்ற போலீசார் மற்றும் மீட்புப் படையினர் குளத்தில் மூழ்கி உயிரிழந்த ஐந்து சிறார்களின் உடல்களையும் மீட்டனர்.
குளத்தில் மூழ்கி ஐந்து சிறார்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.