ETV Bharat / bharat

தமிழ்நாட்டில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு!

தமிழ்நாட்டில் 9 பேர் டெல்டா பிளஸ் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாதிப்பு நாடு முழுக்க 48 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.

Delta Plus
Delta Plus
author img

By

Published : Jun 25, 2021, 5:40 PM IST

டெல்லி : நாட்டில் சார்ஸ் கோவிட்-2 வகையை சேர்ந்த டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து தேசிய தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையத்தின் மருத்துவர் சுஜீத் குமார் சிங் கூறியதாவது:-

நாட்டில் 48 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. டெல்டாவிலிருந்து இது ஒருவகை வைரஸ்தான். மாறாக பிளஸ் என்றால் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் என்று அர்த்தம் கொள்ள தேவையில்லை. இதுவும் ஒரு தொற்று நோய்தான். இது குறித்து ஆய்வுகள் நடைபெற்றுவருகின்றன.

நாடு முழுக்க இந்த வகை வைரஸ்கள் 11 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளன. அவை, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், குஜராத், கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் மற்றும் கர்நாடகா ஆகும்.

பொதுவாக ஒரு வைரஸ் மரபணு மாற்றத்தை ஏற்படுத்த 10-12 நாள்கள் பிடிக்கும். இந்த வகை வைரஸ்கள் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் தகவல் அளித்துள்ளோம். மாதிரி மரபணுக்களையும் அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளோம்” என்றார்.

டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்புகளின் மாநில நிலவரம்:-

வ.எண்மாநிலம்பாதிப்புகள்
01மத்தியப் பிரதேசம்07
02மகாராஷ்டிரா20
03பஞ்சாப்02
04குஜராத்02
05கேரளா03
06ஆந்திரா01
07தமிழ்நாடு09
08ஒடிசா01
09ராஜஸ்தான்01
10ஜம்மு01
11கர்நாடகா01
மொத்தம்48

இதையும் படிங்க : டெல்டா பிளஸ் வைரஸ் வேறு யாருக்கும் பரவாயில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.