ETV Bharat / bharat

பொது பாதுகாப்பு சட்டம்: காஷ்மீரில் கைதான 430 பேர் விடுவிப்பு! - kashmir 430 PSA detainees released

காஷ்மீர்: பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 613 நபர்களில் 430 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காஷ்மீர்
காஷ்மீர்
author img

By

Published : Feb 3, 2021, 4:59 PM IST

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, அங்கு பொது பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்தது. இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் 2 வருடத்துக்கு எந்தக் கேள்வியும் இல்லாமல் சிறையில் வைக்கலாம். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வாரன்ட் தேவையில்லை. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டிய அவசியமில்லை. காவல் துறை ஆணையர் அல்லது மாவட்ட ஆட்சியர்களே இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துவிட முடியும். இச்சட்டத்தால் 18 வயதுக்குட்பட்டவர்களும் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 430 நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரிவினைவாதிகள், கல் வீசியவர்கள் உட்பட 613 பேர் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதில், 430 பேர் இன்று வரை விடுவிக்கப்பட்டுள்ளனர். யூனியன் பிரதேசத்தில் எந்தவொரு நபரும் வீட்டுக் காவலில் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: குழந்தையுடன் நின்ற பெண்ணை ஓடஓட விரட்டி கோடாரியால் தாக்குதல்! பதைபதைக்கும் சிசிடிவி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.