ETV Bharat / bharat

16வது நாளாக தொடரும் மீட்பு பணி.. உத்தரகாண்ட் சுரங்கத்தில் நடப்பது என்ன? - 16வது நாளாக தொடரும் பணி

uttarakhand tunnel rescue update: உத்தரகாண்ட் மாநிலத்தில் தீபாவளி தினத்தன்று நடந்த விபத்தில், சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 16வது நாளாக நடந்து வருகிறது.

41 workers trapped in uttarakhand silkyara tunnel rescue operations continue in day 16
உத்தரகாண்ட் சுரங்க விபத்து
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 27, 2023, 1:25 PM IST

உத்தரகாசி: உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் மலையைக் குடைந்து சுரங்கம் அமைத்து தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த சில்க்யாரா சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12ஆம் தீபாவளி தினத்தன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கப்பாதையில் பணியாற்றிக் கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதனையடுத்து பேரிடர் மீட்பு படையினர், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் நிபுணர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன.

சுரங்கத்தில் அதிகளவு பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால், அதனை அகற்றி தொழிலாளர்களை மீட்க அதிக காலம் ஆகும் என்பதால் சுரங்கத்தில் செங்குத்தாக துளையிடுவது, பக்கவாட்டில் துளையிடுவது, ஆள் நுழையக்கூடிய வகையில் துளையிட்டு பைப் லைன் அமைப்பது என பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு மீட்டு பணிகள் நடைபெற்று வந்தன.

மேலும், சுரங்கத்தில் சரிந்து விழுந்த பாறைகளை அகற்றும் பணியும் ஒருபுறம் நடந்து வருகிறது. சுரங்கத்தின் மறுபுறத்தில் இருந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. வெடிகள் வைத்து தகர்ப்பது ஆபத்தான பணி என்பதால் அந்த பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

மேலும், ஆகர் இயந்திரம் மூலம் துளையிட்டு 3 அடி அகலத்திலான குழாய்கள் அமைக்கப்பட்டு அதன் வழியாக உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டிய போது ஆகர் இயந்திரத்தின் பிளேசி உடைந்து உள்ளே சிக்கிக் கொண்டது. இதனால் தொழிலாளர்கள் மீட்கப்படுவது மேலும் தள்ளி போனது.

கடந்த 16 நாட்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களைக் காப்பாற்ற பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளனர். ஆகர் இயந்திரம் மூலம் துளையிடும் பணியில் தடை ஏற்பட்டதால் அடுத்தக்கட்டமாக சுரங்கத்தின் மேலிருந்து துளையிடும் பணியை சட்லஜ் ஜல் வித்யுத் நிகாம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் லிமிடெட் (NHIDCL) நிர்வாக இயக்குனர் மஹ்மூத் அகமது, “நாங்கள் சுமார் 19.2 மீட்டர் தோண்டும் பணியை முடித்துவிட்டோம். நவம்பர் 30ஆம் தேதிக்குள் 86 மீட்டர் துளையிட வேண்டும். துளையிடும் இடத்தில் நாங்கள் புவியியல் ஆய்வுகளை மேற்கொண்ட போது அதில் எந்த தடங்கலும் தெரியவில்லை. இதனால் சரியான நேரத்தில் பணி முடிவடையும்” எனத் தெரிவித்தார்.

உத்தரகாண்ட் அரசின் செயலாளரும், மீட்பு நடவடிக்கையின் நோடல் அதிகாரியுமான நீரஜ் கைர்வால் கூறுகையில், “சுரங்கப்பாதையில் சிக்கிய ஆகர் இயந்திரத்தை அகற்றும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. பிளாஸ்மா கட்டிங் மிஷின்கள் மற்றும் இதர இயந்திரங்கள் வந்துள்ளதால், பணிகள் வேகமாக நடக்கின்றன.

ஆகர் இயந்திரத்தின் பாகத்தை அகற்ற எவ்வளவு காலம் எடுக்கும் என சொல்ல முடியாது. பழுதடைந்த பிளேடை முன்பை விட வேகமாக அகற்றுகிறோம். அதை அகற்றிய பிறகு, உள்ளே மனித சக்தி மூலமாக துளையிடுவோம். அந்த பணியை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து ராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவு ஒரு திட்டத்தை தயார் செய்யும்” எனத் தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் (NHIDCL) நிர்வாக இயக்குநர் மஹ்மூத் அஹ்மத் கூறுகையில், “எங்கள் 41 தொழிலாளர்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவதே எங்கள் முதல் இலக்கு. சுமார் 70-80 மீட்டர் தூரத்திற்கு 8 அங்குல குழாய் துளையிடும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அதேசமயம், 1.2 மீட்டர் விட்டம் கொண்ட குழாய் தோண்டும் பணி சுமார் 20 மீட்டருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர், லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) சையத் அட்டா ஹஸ்னைன் கூறுகையில், “சுரங்கப்பாதையின் மேலோட்டத்தை அடைய 86 மீட்டர் செங்குத்தாக துளையிட்டு சுரங்கத்தில் சிக்கி இருக்கும் தொழிலாளர்களை மீட்கும் எங்களது பிளான் 2 தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.

துளையிடும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு 86 மீட்டரில் தற்போது 17 மீட்டர் துளையிடும் பணி நடந்துள்ளது. நாங்கள் புவியியல் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். அதில் எந்த தடையும் தென்படவில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் துளையிடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. வெற்றிகரமாக துளையிட்டு முடிக்கப்பட்ட பின் தொழிலாளர்கள் கிரேன் உதவியுடன் மீட்கப்படுவார்கள்.

தொழிலாளர்களின் நிலைமை சீராகவும், பாதுகாப்பாகவும் உள்ளது. தொழிலாளர்கள் அனைவருக்கும் தேவையான உணவு மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. மருத்துவ மற்றும் உளவியல் வல்லுநர்கள் அங்கு வந்து தங்கள் பணியைச் செய்கிறார்கள். அனைவரின் பாதுகாப்பிற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 31 துண்டுகளாக வெட்டி இளம்பெண் கொடூர கொலை.. திருமணத்தை மீறிய உறவால் நடந்த விபரீதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.