சர்ரே: கனடாவின் பிரிட்டீஷ் கொலம்பியாவில் உள்ள சர்ரே(Surrey) நகரில் நேற்று இரவு சுமார் 9.30 மணிக்கு குடியிருப்பு ஒன்றிலிருந்து அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலில் பேரில் நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்திலிருந்த 40 வயதான ஹர்பிரீத் கவுர்(Harpreet Kaur) என்ற பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக ஹர்பிரீத் கவுரின் கணவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். சுமார் 1 மணிநேர விசாரணைக்குப் பிறகு அவரை விடுவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள் தகவல் தெரிவித்து உதவுமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கனடாவின் மிசிசாகா நகரில் 21 வயது பவன்ப்ரீத் கவுர் என்ற சீக்கிய பெண் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், ஹர்பிரீத் கவுர் படுகொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டிவிட்டரில் இருந்து டிரம்ப் நீக்கம் திட்டமிட்டு நடந்ததா?.. டிவிட்டர் பைல்ஸ் 3.0 வெளியீடு