ETV Bharat / bharat

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை! ஆட்சியை பிடிக்கப்போவது யார்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 2, 2023, 10:50 PM IST

4 State Election Vote Counting: ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு மாநிலத்திற்கு நாளை (டிச.03) வாக்கு எண்ணும் பணி தொடங்கவுள்ளது. மிசோரம் மாநிலத்தில் மட்டும் டிசம்பர் 04ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

4-state-election-counting-work-intensifies-tomorrow-election-results
நான்கு மாநிலத்தின் தீர்ப்புகள் நாளை (டிச.03) முடிவாகிறது..!

ஹைதராபாத்: ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் அண்மையில் சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த நிலையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு மாநிலத்திற்கு நாளை (டிச. 3) வாக்கு எண்ணும் பணி தொடங்க உள்ளது.

மிசோரம் மாநிலத்தில் மட்டும் டிசம்பர் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தெலங்கானா: தெலங்கானாவில் உள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. மாநிலத்தின் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 60 இடங்களை கைப்பற்றியாக வேண்டும். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (டிச. 3) நடைபெற உள்ளது. இதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தரப்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் எண்ணுவதற்காக மாநிலம் முழுவதும் 49 மையங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் ஹைதராபாத்தில் மட்டும் 14 வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் 14 மேஜைகள் மற்றும் தபால் ஓட்டுகள் எண்ணுவதற்கு 1 மேஜை அமைக்கப்பட்டுள்ளது.

500 வாக்கு சவாடிகள் கொண்ட 6 தொகுதிகளுக்கு மட்டும் 28 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக மாநிலம் முழுவதும் 1,766 மேஜைகள் இவிஎம் வாக்குகள் எண்ணவும், 131 மேஜைகள் தபால் வாக்குகள் எண்ணவும் ஒதுக்கப்பட்டுள்ளன. நாளை (டிச. 3) காலை சரியாக 8.00 மணிக்கு முதலாவதாக தபால் ஓட்டுகள் எண்ணப்படும் என்றும் அதன் பின் ஒவ்வொரு சுற்றாக வாக்குகள் எண்ணப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசம்: 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்திற்குக் கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமாக மத்திய பிரதேசத்தில் 77.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் நாளை (டிச. 3) வாக்கு எண்ணும் பணியானது மாநிலம் முழுவதும் காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.

இந்த வாக்கு எண்ணும் பணியில் மொத்தமாக 2.82 லட்சம் பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் அதிக அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற 116 இடங்கள் தேவைப்படும் நிலையில், காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

ராஜஸ்தான்: 200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டமன்றத்தில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி 119 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இதில், கரன்பூர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் குர்மீத் சிங் கூனூர் உயிரிழந்ததால், அந்தத் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது. எனவே, மீதம் உள்ள 199 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 25ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற்றது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் வாக்கு எண்ணும் பணி நாளை (டிச. 3) நடைபெற உள்ளது. இதற்காக 33 மாவட்டத்தில் 36 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக மாநிலம் முழுவதும் 2,552 மேஜைகள் அமைக்கப்பட்டு 4,180 சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

சத்தீஸ்கர்: 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் சட்டமன்றத்திற்கு நவம்பர் 7 மற்றும் 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. கடந்த பல ஆண்டுகளுக்குப் பின்னர் முதல்முறையாக நக்சல் பாதிப்புகள் அதிகம் காணப்பட்ட இடங்களில் கூட இம்முறை வாக்குப்பதிவு நடைபெற்றது.

சத்தீஸ்கர் மாநிலத்திலும் நாளை (டிச. 3) வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியானது நாளை (டிச. 3) காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. மாலைக்குள் ஆட்சியை தீர்மானிப்பது யார் என்கிற முடிவு தெரியவரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: அமலாக்கத்துறை என்றால் என்ன? அவர்களின் அதிகாரம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.