ஹோஷியார்பூர் (பஞ்சாப்): ஹோஷியார்பூர் மாவட்டம் ஷெர்பூர் டகோ கிராமத்தில் கனமழை பெய்து கொண்டிருந்தபோது, ஊழியர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.
இருப்பினும் அவர்கள் பணியை நிறுத்தாமல், மழை நீருடன் சேர்த்து சாலை அமைத்தனர். இதை பொதுமக்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த வீடியோ வைரலானது.
இதையடுத்து, நேற்று (ஜூலை 9) பொதுப்பணித்துறையைச் சேர்ந்த தர்செம் சிங், விபன் குமார், பிரவீன் குமார் மற்றும் ஜஸ்பீர் சிங் ஆகிய 4 பொறியாளர்களை பணியிடை நீக்கம் செய்து உயர் அலுவலர்கள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கோத்தபய வீட்டில் கட்டுக்கட்டாக பணம்!