மகாராஷ்டிரா ஹிங்கோலி மாவட்டம் செங்காவுன் அருகே கட்டுமானபணிகளுக்காக பாலத்தின் அடியில் பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அந்த வழியக சென்ற கார் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனையடுத்து அப்பகுதி மக்களை விபத்தில் சிக்கிய நான்கு பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் 4 பேரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
செங்கான் அருகே கட்டுமானப் பணிகள் பல நாள்களாக நடைபெற்று வருவதாகவும், எச்சரிக்கை பலகை வைக்கத் தவறியதால் விபத்து நேர்ந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.