ஸ்ரீநகர் : மத்திய காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்திய காஷ்மீரில் உள்ள கந்தர்பல் பகுதியில் 7 பயணிகள் உள்பட 8 பேர் சுற்றுலா சென்று உள்ளனர். சுற்றுலா பயணிகளின் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஜோஜிலா பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 4 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளதாகவும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருவதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க : தெலங்கானா முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி தேர்வு! எப்போ பதவியேற்பு தெரியுமா?