ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூருக்கு மேற்கே 65 கி.மீ. தொலைவில் காலை 5:28 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகியதாகவும், பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் உயிரிழப்பு, சேதமோ பதிவாகவில்லை. ஜூலை 29ஆம் தேதி மாதம் சத்தீஸ்கரின் கொரியா மாவட்டத்தில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல ஜூலை 11ஆம் தேதி அதேபகுதியில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிரீஸ் நாட்டில் 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சேதம் ஏதுமில்லை