ETV Bharat / bharat

3டி தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட தபால் அலுவலகம்.. மத்திய அமைச்சர் திறந்து வைத்தார்.. - Post Office

India's First 3D Technology Post Office: கட்டடத் துறையில் 3டி தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில் இதே தொழில்நுட்பத்தில் தயாரான தபால் அலுவலக கட்டடம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

3D Technology Post Office
3D Technology Post Office
author img

By

Published : Aug 18, 2023, 7:11 PM IST

  • Every Indian would be proud to see India's first 3D printed Post Office at Cambridge Layout, Bengaluru. A testament to our nation's innovation and progress, it also embodies the spirit of a self-reliant India. Compliments to those who have worked hard in ensuring the Post… pic.twitter.com/Y4TrW4nEhZ

    — Narendra Modi (@narendramodi) August 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

பெங்களூரு: நாட்டின் முதல் முப்பரிமாண அச்சிடப்பட்ட தபால் நிலைய கட்டிடத்தை திறந்து வைத்த பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையில் இந்தியா தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளில் முன்னேற்றம் அடைந்துள்ளது. நமது நாட்டிற்கு தேவையான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்காவும், நமது விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களிடத்தில் புதிய கண்டுபிடிப்புளை ஊக்குவிப்பதில் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்றார்.

முதன்முறையாக, தொலைத்தொடர்பு சாதனங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன, நாடு 4G மற்றும் 5G தொழில்நுட்பங்களை உள்நாட்டில் உருவாக்கியுள்ளது. வந்தே பாரத் போன்ற உலகத்தரம் வாய்ந்த ரயில்களை வடிவமைத்து தயாரிக்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது.3D பிரிண்டிங் என்பது ஒரு டெமான்ஸ்ட்ரேட்டர் தொழில்நுட்பமாகும், இது தற்போது பல துறைகளில் பின்பற்றப்படுகிறது. இந்த தொழில் நுட்பம் செலவை குறைத்து சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது. மேலும் ஆத்ம நிர்பார் பாரதத்தின் கருத்தை அடையாளப்படுத்துகிறது என கூறினார்.

தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ராஜேந்திர குமார் 3D தொழில் நுட்பத்தினால் அச்சிடப்பட்ட தபால் அலுவலகத்தின் நோக்கங்கள் கூறித்து பேசினார். IIT Madras-ன் முதல்வரும் சிவில் இன்ஜினியரிங் பேராசிாியருமான சந்தானம் 3D தொழில்நுட்பத்தால் அச்சிடப்பட்ட தபால் அலுவலகம் கட்டுவது பற்றிய தொழில்நுட்ப விவரங்கள் கூறித்து பேசினார்.

3D தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பெங்களூருவின் கேம்பிரிட்ஜ் லே அவுட் பகுதியில் இந்த தபால் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. மெட்ராஸ் IIT மற்றும் எல்&டி நிறுவனம் சார்பில் அச்சிடும் தொழில்நுட்பம் மூலம் கட்டடம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறும்படம் இந்த நிகழ்வில் திரையிடப்பட்டது.

3D தொழில்நுட்பத்தால் அச்சிடப்பட்டு கட்டப்பட்ட தபால் நிலைய கட்டடத்தின் சிறப்பை வெளிபடுத்தும் விதமாக புதிதாக கட்டப்பட்ட தபால் நிலையத்தின் புகைப்படத்தை தபால் முத்திரையாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார். மேலும் இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பி.சி. மோகன், சதானந்த கவுடா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின் மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது: பெங்களூருவில் துணை நகர்ப்புற ரயில் சேவையைத் தொடங்குவதற்கு மத்திய அரசு உறுதியாக இருப்பதாக தொிவித்தார். விரைவு ரயில்கள் இயக்குவதற்காக 4000 கிமீ ரயில் பாதை மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், வந்தே பாரத் ரயில்களை இயக்கும் வகையில் அடுத்த நான்கு முதல் ஜந்து ஆண்டுகளில் தண்டவாளத்தின் திறன் அதிகரிக்கப்படும் என தொிவித்துள்ளார்.

டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023 பற்றிய செய்தியாளர் கேள்விக்கு...இது சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒரு சட்டம், நிபுணர்கள் மற்றும் பல்வேறு நபர்களுடன் ஆலோசனைக்கு பிறகே இச்சட்டம் இயற்றப்பட்டதாக தொிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Madras IIT:சென்னை ஐஐடியில் கட்டுமானத் தொழில்நுட்ப ஆன்லைன் படிப்பு துவக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.