கவுஹாத்தி : அஸ்ஸாமில் உல்பா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 3 ஆயிரத்து 439 பயங்கரவாதிகள் கடந்த 5 ஆண்டுகளில் சரணடைந்துள்ளதாக மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிஸ்வா சர்மா கூறினார்.
மாநில சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த சர்மா, ஜூலை 6ஆம் தேதிவரை 1,306 துப்பாக்கிகள், 20 ஆயிரத்து 722 வெடிமருந்துகள், 89 குண்டுகள், 599 கையெறி குண்டுகள், 121.72 கிலோ வெடிபொருள்கள் பயங்கரவாதிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உல்பா, போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி, கம்தாபூர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்களை சேர்ந்த 3 ஆயிரத்து 439 பேர் இதுவரை சரணடைந்துள்ளனர்.
இவர்களின் மறுவாழ்வுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன” என்றார்.
இதையும் படிங்க : அஸ்ஸாம் முதலமைச்சராக ஹிமாந்த விஸ்வ சர்மா பதவியேற்பு