கர்நாடகம்: பெலகாவி மாவட்டத்திலுள்ள சிரேகானி என்கிற கிராமத்தில் கடந்த ஏப்.26 அன்று காட்டிற்கு அருகேயுள்ள தன் பாட்டி வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுமி திடீரென காணாமல் போனார். தன் பெற்றோருடன் தன் பாட்டி வீட்டிற்கு விஷேசத்திற்காக ஏப்.25 அன்று வந்த சிறுமி, மறுநாள் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருக்கும் போது திடீரென மாயமானார்.
இதனையடுத்து, அச்சிறுமியின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் தெரிவித்தனர். மேலும், சிறுமியை பெற்றோரும், உறவினர்களும், அந்த ஊர் இளைஞர்களின் துணையுடன் காவல்துறையினரும் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், அந்தச்சிறுமி, 4 நாட்களுக்கு பிறகு ஏப்.30 அன்று அடர்ந்த காட்டினுள் ஒரு மரத்தடியில் மயக்கநிலையில் காணப்பட்டார். அச்சிறுமியின் கால் மற்றும் கைகளில் பூச்சிகள் கடித்திருந்ததால் அவரால் நடக்கமுடியாத நிலையில் இருந்துள்ளார்.
உடனே அச்சிறுமியை அந்த டவுனிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதன் பிறகு, அச்சிறுமி பெலகாவி மாவட்டத்திலுள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு நடத்தப்பட்ட தீவிர சிகிச்சைக்குப் பின்னர் சிறுமி நலமாகி வருகிறார் . 4 நாட்களாக காணாமல் போன மூன்று வயது சிறுமி காட்டில் கண்டெடுக்கப்பட்டச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: Video: தாக்க வந்த ஒற்றை யானை..சுற்றுலா பயணிகள் அலறல்!