டெல்லியின் கஜூரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தொழிலாளர்கள் பழுதுபார்க்கும் பணிகள் மேற்கொண்டிருந்தபோது, திடீரென வீட்டு கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் மூன்று வயது சிறுமியும், இளம்பெNணும் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.
இதுகுறித்து தகவலறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இரண்டு பேரை மீட்டு ஜக்பிரவேஷ் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இளம்பெண் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார். வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சிறுமியின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.