மத்தியப் பிரதேசம்(போபால்): பொதுவாக குழந்தைகளுக்கு போலீஸை கண்டால் ஒரு பயம் இருக்கும். ஆனால், சதாம் எனும் ஓர் மூன்று வயது சிறுவன் டெட்டாலி காவல் நிலையம் சென்று தன்னுடைய தாயாருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். தன்னுடைய தந்தையுடன் காவல் நிலையம் வந்த இந்த சிறுவன், தன்னுடைய தாயார் தன்னை அடிப்பதாகவும், தன்னுடைய சாக்லெட்களை திருடித் திண்பதாகவும் புகார் அளித்தார். குறிப்பாக, தனது தாயை சிறையில் அடைக்குமாறும் காவல்துறையினரிடம் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்து விளக்கிய சதாமின் தந்தை, சதாமிற்கு காஜல் போட்டு விடும்போது அடம்பிடித்தால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது தாயார் கன்னத்தில் செல்லமாக அறைந்துள்ளார். இதனால் கோபமடைந்த சதாம், தன்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லுமாறு என்னிடம் கேட்டார் நானும் அழைத்து சென்றேன். அங்கு புகாரை கண்ட துணை காவல் ஆய்வாளர் பிரியங்கா நாயக், சதாமை சந்தோஷப்படுத்துவதற்காக புகாரை ஏற்றது போல் எழுதி வைத்துக்கொண்டார் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’ஸ்ரீஹரி’ என ஆரம்பித்து இந்தியில் மருத்துவக் குறிப்பு எழுதிய அரசு மருத்துவர்..