ஸ்ரீ நகர் ; ஜம்மு காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள பரேஸ்வானி பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும்,தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
இது சம்பவம் குறித்து பேசிய உயர் காவல் துறை அதிகாரி “புட்காம் காவல் துறையினர் கொடுத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதனைத்தொடர்நது பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்தனர். இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 3 பேரும், குடியிருப்புவாசி ஒருவரும் காயம் அடைந்தனர் என தெரிவித்தார்.
பதுங்கியிருக்கும் நபர்களை பிடிக்க துப்பாக்கிச் சண்டை தொடர்வதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:ஜம்மு காஷ்மீர் என்கவுன்ட்டர்: வீழ்த்தப்பட்ட 3 பயங்கரவாதிகள்