மும்பை: மகாராஷ்டிராவில் மும்பை-புனே அதிவேக நெடுஞ்சாலையில் கார் மீது கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி, வேகமாக மோதியது. இதில் கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் ஜோகிம் செட்டியார் (36), அவரது மனைவி லூயிசா (35), மகன் ஜாஜியல் (4) ஆகிய மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பான காட்சி அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன் மறைவு