பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டம் சர்சேனி பகுதியில் சாலையோர உணவகத்தில் நிறுத்தப்பட்டிருந்த எண்ணெய் லாரி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஜஸ்விந்தர் சிங் (35), பாப்லு (20), விக்ரம் (24) ஆகிய மூன்று பேர் உயிரிழந்தனர்.
மேலும் ஒருவர் 80 விழுக்காடு தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், எண்ணெய் லாரியிலிருந்து சிலர் எண்ணெய் திருட முற்சித்த போது விபத்து நிகழ்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தீ விபத்து!