அமராவதி: ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் புட்டாயிகுடெம் பகுதியில் சுமார் 30 பேர் டிராக்டரில் பயணம் செய்து வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது லாரி மோதி விபத்திற்குள்ளானது. அந்த விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து பேசிய மேற்கு கோதாவரி காவல்துறை கண்காணிப்பாளர் நாராயன் நாயக், " சுமார் 60 பேர் மூன்று டிராக்டரின் மூலம் கிருஷ்ணா மாவட்டத்திலிருந்து, குப்பாலா மங்கங்மா கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்தனர் அப்போது, புட்டாயிகுடெம் பகுதியில் அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, ஒடிசாவிலிருந்து வந்துகொண்டிருந்த லாரி ஒன்று நின்றுகொண்டிருந்த ஒரு டிராக்டரின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 17 பேர் அருகிலுள்ள எலூரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரிக்க விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் 2 விவசாயிகளின் உடல்கள் கண்டெடுப்பு!