கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள ஹரிதேவ்பூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான மூன்று பேரை காவலர்கள் கைதுசெய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், ஜமாத் உல் முஜாஹுதீன் என்ற பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவின் சொந்த மாவட்டமான கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த இவர்கள் சிகிச்சைக்கு வருகை தந்ததாகக் கூறி கொல்கத்தாவில் தங்கியுள்ளனர்.
மேலும் இவர்கள் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டல், ஆள் சேர்த்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களிடம் உளவுத் துறை அலுவலர்களும் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக காவல் துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கூட்டம் சேர்ந்தால் 3ஆம் அலை - ஐ.எம்.ஏ. எச்சரிக்கை