காசியாபாத்: உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் முராத் நகரில் உள்ள அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் நேற்று(ஆக.31) இரவு உணவு சாப்பிட்ட சுமார் 30 மாணவிகளுக்கு திடீரென வாந்தி, வயிற்றுவலி, மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
வயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட 12 மாணவிகள் முராத்நகர் மருத்துவமனையிலும், 17 மாணவிகள் காசியாபாத் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ராகேஷ்குமார் சிங், குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று மாணவிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகேஷ்குமார் சிங், மாணவிகளின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தார். மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவு மற்றும் குடிநீரின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடத்த துணை ஆட்சியர்-கல்வித்துறை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அஸ்ஸாமில் குழந்தையை கடத்த முயன்றதாக ஒருவர் அடித்துக் கொலை