ஷாஜஹான்பூர்: உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் 28 ஆண்டுகளுக்கு முன்பு மைனர் பெண் ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 2 சகோதரர்கள் தற்போது DNA டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளனர்.
28 ஆண்டுகளுக்கு முன்பு 12 வயதுடைய பெண்ணை அருகிலிருந்த பக்கத்துவீட்டில் இருந்த 2 சகோதரர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 1994 முதல் 1996 ஆம் ஆண்டுகளில் இந்த வன்கொடுமை நடந்திருக்ககூடும் எனக் கருதப்படுகிறது.
பாலியல் வன் கொடுமையால் சிறுமியாக அந்தப் பெண்ணுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பெற்றோரின் வற்புறுத்தலால் அந்தக் குழந்தையை உத்தரப் பிரதேச தம்பதியினரிடம் தத்துக்கொடுத்துள்ளார் இளம்பெண்.
மேலும் இந்த வன்கொடுமை குறித்து ஏதேனும் வெளியே கூறினால் கொன்று விடுவதாக அந்த சகோதரர்கள் மிரட்டியுள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்மணி 20 ஆண்டுகளுக்கு பிறகு அவரது மகனை சந்தித்துள்ளார்.
பின்னர் அவரது மகனிடம் தன் வாழ்வை அழித்தவர்களுக்கு தண்டனை பெற்று தருமாறு கேட்டுள்ளார். இந்த வழக்கை விசாரித்த காவல் துறையினர் DNA டெஸ்ட் மூலம் குற்றவாளிகளை கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மகன் செய்தியாளர்களிடம், ‘இந்தப் போராட்டத்தை முறையாக எடுத்து முடிவுக்குக் கொண்டு வருவோம், மேலும் பாதிக்கப்பட்ட என் அம்மாவுக்கு நீதியை கிடைக்க செய்வோம்’ எனக் கூறினார்.
இதையும் படிங்க:ஈரோடு; தலைமை மருத்துவர் மீது பெண் பாலியல் புகார்