பசுக்கள் கொல்லப்படுவதையும் கடத்தப்படுவதையும் தடுக்கும் வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு பசு பாதுகாப்பு பிரிவு உருவாக்கப்பட்டது.
இதுவரை பசுவதைத் தடைச் சட்டத்தின் கீழ் 177 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 277 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதில், குமாவோன் பகுதியில் 176 பேரும் கர்வால் பகுதியில் 101 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் காவல்துறை இயக்குநர் அசோக் குமார் பசு பாதுகாப்பு பிரிவின் செயல்பாடுகள் குறித்து நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆய்வு மேற்கொண்டார்.
இந்தப் பிரிவின் செயல்பாடுகளை மாதந்தோறும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அவர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். அது மட்டுமின்றி, அனைத்து மாவட்டங்களிலும் சட்டவிரோதமாக இயங்கும் பசுவதை கூடாரங்களின் பட்டியலைத் தயார் செய்து அதன் மீதும் கடத்தல்காரர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.