ETV Bharat / bharat

கோயிலில் மின்னல் தாக்கியதில் 25 பக்தர்கள் காயம்! - தன்பாத்தில் கோயிலில் மின்னல் தாக்குதல்

கோயிலில் மின்னல் தாக்கியதில் 25 பக்தர்கள் காயமடைந்தனர். அதில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Rajwadi
Rajwadi
author img

By

Published : Aug 1, 2022, 8:52 PM IST

தன்பாத்: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தின் பர்கா கிராமத்தில் உள்ள பழமையான ராஜ்வாடி கோயிலில் "சவான் சோமவர்" என்ற சிறப்பு பூஜைக்காக ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தனர். அங்கு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து கொண்டிருந்த நிலையில், திடீரென கோயிலில் மின்னல் தாக்கியது.

இதில் கோயிலில் இருந்த பக்தர்கள் பலர் காயமடைந்தனர். உடனடியாக உள்ளூர் வாசிகள் விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சுமார் 25 பேர் காயமடைந்ததாக தெரிகிறது. இதில் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை பெய்ததால், கோயிலுக்கு வந்த பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அருகில் இருந்த பள்ளிக் கட்டடத்தில் ஒதுங்கியிருந்ததாகவும், சம்பவம் நடந்தபோது அவர்களும் கோயிலில் இருந்திருந்தால் காயமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கும் என்றும் உள்ளூர்வாசிகள் கூறினர்.

இதையும் படிங்க:ஜபல்பூர் மருத்துவமனை தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.